கோவை: காவல் துறையை மோசமாக விமர்சித்து, இரு மதத்திற்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கோவில் சொத்துக்கள் மீட்பு உண்ணா விரதத்தில் பா.ஜ.க., தமிழக தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார். அப்போது சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் மறுக்கப்பட்டால் காவி படை காக்கிகளை அடக்கியாளும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகும் எனவும், காக்கிகளுக்கு காவி படை தகுந்த பாடம் நடத்தும் என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
இதனை பா.ஜ.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இப்படி தமிழிசை பேசியது காவல் துறையினருக்கு மிரட்டல், சவால் விடுக்கும் வகையிலும், சிறுபான்மையினரிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் உள்ளது.
எனவே, தமிழிசை சவுந்திரராஜன் மீது இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மாநகர ஆணையாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர்.