கோவை: பள்ளி மாணவர்களிடையே குளங்கள் மற்றும் இயற்கையை பாதுகாத்தலின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

க்யூப் (Centre for Urban Biodiversity Conservation and Education - CUBE) என்ற தன்னார்வ அமைப்பும், கோவை மாநகராட்சியும் இணைந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வகுப்பை நடத்தி வருகின்றன. இதற்காக சிறப்பு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குக் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் உள்ள குளங்கள், அதனைச் சார்ந்துள்ள மனிதர்கள் மற்றும் இயற்கை அமைப்பு குறித்து மாணவர்கள் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க இந்த வகுப்புகள் உதவுகின்றன.
மாணவர்கள் வெளிக்கொண்டுவரும் ஆராய்ச்சி முடிவுகள், தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் இடம் பெற வழிவகை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகள், சிங்காநல்லூர் அருகே உள்ள குளத்தேரி குளக்கரையில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. கடந்த 2017-2018 கல்வியாண்டில் மட்டும் சுமார் 3,000 மாணவர்கள் இந்தவகுப்பில் கலந்து கொண்டனர்.

இது குறித்து க்யூப் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர் வருண் கூறுகையில், "திட்டத்தின் தொடக்க நோக்கம், ஈர நிலங்களின் முக்கியத்துவத்தையும், நகர்ப்புறங்களில் உள்ள ஈர நிலங்களின் முக்கியத்துவத்தையும், ஏரிகளின் பாதுகாப்புக்காக எவ்வாறு பங்களிப்பது ஆகியவை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதாகும்.
இந்த திட்டம் தொடங்கியது முதல் தற்போது வரை நிறைய முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். அதன்படி, நடப்பு ஆண்டில் இந்த பணியை இன்னும் சிறக்க செய்வோம்.
இந்தாண்டு 16 பள்ளிகளில் இருந்து 1,170 மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
வகுப்பில், குளத்தின் கரையோர பகுதிகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்குள்ள பறவைகள், சூழலியல், பட்டாம்பூச்சி இனங்கள் போன்றவற்றை பார்த்து பாடம் படிக்கிறார்கள். இதன் ஒவ்வொரு படியிலும், அவர்கள் ஏதேனும் ஒரு புதிய கல்வியை கற்கிறார்கள்.

மழைக்காலங்களின் போது எங்கள் தன்னார்வலர்கள் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவார்கள்." என்றார்.