எப்படித்தான் வளர்ப்பதோ? - ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய குழந்தை வளர்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பதின் பருவத்தினை எட்டிய குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ‘எப்படித்தான் வளர்ப்பதோ’ நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று (ஞாயிறு) ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பதின் பருவத்தினை எட்டிய குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ‘எப்படித்தான் வளர்ப்பதோ’ நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று (ஞாயிறு) ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டதாவது, "பிள்ளைகளிடம் எப்போதும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேச வேண்டும். உன்னால் முடியாது, நீ எப்பவுமே இப்படித்தான் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். இதனால் கோபம் ஏற்பட்டு மிகுந்த தாழ்வுணர்ச்சி ஏற்படும். தாழ்வுணர்ச்சி, தன்னம்பிக்கையின்மையினால் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தயங்குவார்கள்.

பதின் பருவத்தினர் அடுத்து கல்லூரி வாழ்க்கை, வேலை, திருமணம் என்று வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிப்பவர்கள். நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தன்னம்பிக்கையுள்ள பிள்ளையாக இருந்தால் பிரச்சனைகளை உணர்வுப் பூர்வமாக அணுகாமல், அறிவுப் பூர்வமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். இல்லையெனில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சி போன்ற தவறான முடிவுகள் குறித்து யோசிப்பார்கள்.

பிள்ளைகள் பெற்றோரிடம் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்து கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்ல வருவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பெற்றோரின் கண் பார்வையைக் கொண்டே சொல்லும் விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதை பிள்ளைகள் முடிவு செய்வார்கள்.

நமது பேச்சின் மொழி, உடல் மொழியைக் கொண்டே சொன்ன விஷயத்தில் பெற்றோரின் மனநிலையை, அக்கறையை, ஆர்வத்தை அறிந்து கொள்வார்கள். ஆகவே, பிள்ளைகள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் சிரத்தையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சோகமாக இருந்தார்களெனில் அவர்களின் கவலையை புரிந்து கொள்வதாக பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். அவர்களிடம் வருடினாற் போல் பேசி இலகுவாக முயற்சி செய்யுங்கள். அவர்களின் அனைத்து உணர்வுகளையும் வெளிக்காட்ட முயற்சி எடுங்கள். அதற்கு மருந்தாக மென்மையான மற்றும் அக்கறையான பேச்சும் பெற்றோரிடம் இருப்பது அவசியம்.

பதின்பருவத்தினரிடம் அதீத அறிவுரை, உத்தரவிடுவது, அதட்டல், ஏளனமாகப் பேசுவது, ஊக்கப்படுத்தாமல் இருப்பது, தாழ்வுணர்ச்சி ஏற்படும்படியாக பேசுவது, கிண்டல், கேலி, கத்துவது போன்று நடந்து கொள்ளும் முறை எப்போதும் சரியானது அல்ல. அது குழந்தைகளிடம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

பதின்பருவத்தினர் தான் வளர்ந்துவிட்டதாகவும், பெரியவர்களுக்கு நிகராகவே தன் மனநிலை இருப்பதாகவும் நினைத்து செயல்படுவார்கள். எல்லா முடிவுகளையும் தன்னால் சரியாக எடுக்க முடியும் என்று நம்புவார்கள். பெற்றோர்கள் அதை உடனே அதட்டி உடைக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களிடம் எப்போதுமே எந்தத் தருணத்திலும் பொறுமையாக நன்மை, தீமை குறித்து எடுத்துக் கூற வேண்டும். குடி, போதை, புகைப் பழக்கவழக்கங்கள் பெரும்பாலானோருக்கு பதின் பருவத்திலேயே துவங்குவார்கள். அதில் உள்ள கெடுதல்களை புரிய வைக்க வேண்டும்.

பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளிடம் தோழர்களாக நடந்து கொள்ள முடியாது. ஆனால், தோழமையான வார்த்தைகளைக் கூற முடியும். எந்தப் பிரச்சனையானாலும் என்னிடம் பங்கிர்ந்து கொள். உன்னை தண்டிக்கமாட்டேன், பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு கொடுங்கள். எந்தப் பழக்கவழக்கத்தை பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கின்றோமோ அதை பெற்றோர்களும் பின்பற்ற வேண்டும். சரியான பாதையில் பிள்ளைகளை வளர்த்தால் எப்போதும் தவறான தீர்மானங்களை எடுக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...