சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவின் கீழ் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை எனக் கூறி இந்தத் திட்டத்திற்கு தடை கோரி பூவுலகின் நண்பர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த கருத்துக் கேட்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், 2013-ல் கொண்டு வரப்பட்ட நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லும் எனக் கூறிய நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.