திருப்பூர்: திருப்பூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர், நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் - வீரபாண்டி பகுதி திருமுருகன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (21). ஐ.டி.ஐ., படித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனிடையே, ஹரிகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்த்து அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாத அவர், தெர்மாகோல் அட்டை மூலம் நண்பர்களுடன் கிணற்றில் இறங்கிக் குளித்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ஹரிகிருஷ்ணன் நீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து, அவர் நீரில் மாயமானார். தொடர்ந்து, அவரது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் வீரபாண்டி போலீசார், தீயணைப்புதுறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.