உணவுகளை வீணடிக்க வேண்டாம் என்பது தொடர்பான 'மா' குறும்பட வெளியீட்டு விழா

கோவை: உணவுகளை வீணடிக்க வேண்டாம் என்பது தொடர்பான 'மா' குறும்பட வெளியீட்டு விழா கோவையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

கோவை: உணவுகளை வீணடிக்க வேண்டாம் என்பது தொடர்பான 'மா' குறும்பட வெளியீட்டு விழா கோவையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீடுகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தினசரி அடிப்படையில் உணவுகள் வீணடிப்பதின் தாக்கத்தை பற்றி பொது மக்களுக்கு கல்வி கற்பிக்க இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஐ டி சி வெல்கம் ஹோட்டலில் நடந்த இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் எஸ்.எம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சதீஷ் நாயர் இதனைத் தெரிவித்தார்.

'மா' தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் குறைந்த உரையாடல்களுடன் ஆங்கில சப்டைட்டில்களை கொண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவு என்றாலும், அது பார்வையாளர்கள் வீணாக்கும் உணவுப் பொருளைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கும் வலுவான செய்தியை தெரிவிக்கிறது.

உணவுத் தொழிற்துறையில் உணவு பதப்படுத்துதல் ஆட்டோமேஷன் பகுதியில் நெருக்கமாகப் பணியாற்றும் எஸ்.எம்.கார்ப்பரேஷன் உலகம் முழுவதும் பரவலான உணவுப் வீணாக்கப்படுவதை பற்றி உணர்கிறது. எஸ்.எம் கார்ப்பரேஷனில் உள்ள நாங்கள் இந்த சிக்கலின் கடுமையான தாக்கத்தை சித்தரித்துக் காட்ட விரும்பியதால் இந்த குறும்படம் ‘மா’ பார்வையாளர்களின் மனதில் மிகுந்த ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...