கோவை: மலுமிச்சம்பட்டி அருகே உள்ள கண்டிகவுண்டன் குட்டையை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினர்.

இது தொடர்பாக அக்கட்சியினர் வெளியிட்ட குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிணத்துக்கடவு தொகுதி - மலுமிச்சம்பட்டி போடிபாளையம் சாலையில் நீர்த்தேக்கத்திற்காக முன்னோர்கள் பயன்படுத்திய கண்டிகவுண்டன் குட்டை புதர் மண்டி, நெகழிக்கழிவுகளாலும், சீமைக்கருவேல மரத்தாலும் சூழ்ந்து சிறு அணை இருப்பதே தெரியாமல் இருந்தது.
சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பிற்குத் தேவையான நிலத்தடி நீரை கொடுக்கவல்ல இந்த குட்டையை நீர் தேக்கி இயற்கைக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் விதமாக மீட்டுருவாக்க பணியில் நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை அனைத்து உறவுகள் முதல் நாள் களப்பணியை செய்தது.

நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவின்படி நீர்நிலைகளை மீட்டுருவாக்கி மழை நீரை சேமித்து நீர்வளத்தைப் பெருக்கும் விதமாக ஆட்சியில் இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியில் நாம் தமிழர் கட்சி.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த முதல் வார களப்பணியில் குட்டையில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன.