திருப்பூர் : நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற மீண்டும் போராட வேண்டிய நிலையில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக திருப்பூரில் 2-வது நாளாக நடந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் 3-ம் மாநில மாநாட்டில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-ம் மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 2-வது நாளாக நடந்த இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது :- மாற்றுத்திறனாளிகள் யாசகம் கேட்கவில்லை. அவர்கள் பிச்சையும் கேட்கவில்லை. பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக சமஉரிமை, சமவாய்ப்பை கேட்கிறார்கள். அதனை மறுக்காதீர்கள். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு வழக்குகளை நீதிமன்றம் சந்தித்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவு வாங்கினால் மட்டும் போதாது. அதனை அமல்படுத்தவும் போராட வேண்டி உள்ளது. ரயில்களில் ஏறுவதற்கு அனைத்து பெட்டிகளிலும் சாய்வுதளம் மற்றும் தனி கழிப்பறை வைப்பதாக ரயில்வே அமைச்சகம் ஒப்புக்கொண்டது. ஆனால். இன்று வரை அமல்படுத்தப்படாமல் உள்ளது.
அதேபோல. போக்குவரத்திலும் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு உரிய வசதிகள் இல்லை. மாற்றுத்திறனாளிளுக்கு பேருந்தில் மின்தூக்கி வைக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாறியதும் திட்டத்தை கைவிட்டுவிட்டனர். போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறைகளில் பணியின் போது விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி ஆகிவிட்டால் அவர்களை வேலையை விட்டு நீக்கும் நிலை உள்ளது. மாறாக அவர்கள் ஓய்வுபெறும் வரை சம்பந்தப்பட்ட பணிகளில் வேறு வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். பொதுத்துறையில் வேலைபார்ப்பவர்களின் நிலை இது. ஆனால், தனியார்துறையில் வேலை பார்த்தால் அவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாமல் உள்ளது.
ஆகவே, சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும். மனநலம் குன்றியவர்களும் மாற்றுத்திறனாளிகள் தான். பணிகாலத்தில் ஒருவர் மனநலம் குன்றினால் மாற்றுத்திறனாளி தான். அவர்களை வேலையை விட்டு அனுப்பமுடியாது. சட்டம் எளிமையாக இல்லாமல் இருப்பது, இருக்கும் சட்டத்தை அமல்படுத்த நீதிமன்றம் செல்ல வேண்டி இருப்பது, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தப் போராட்டம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு இயக்கங்கள் தேவைப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளும் நீதிமன்றம் பலதீர்ப்புகள் வழங்கி உள்ளன. நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற மறுபடியும் போராடுவது தான் வேதனையான செயல், என்றார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளிகளானவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.