கோவை: இந்து அமைப்புத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் முக்கியமான இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாகவும், அந்த நபர்கள் சென்னையில் இருந்து கொச்சின் செல்லும் ரயிலில் பயணிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த நபர்களை கோவை ரயில் நிலையத்தில் இறங்கும் போது சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் கோவை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்த ஐந்து பேரும் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது மகன் ஓம்கார் பாலாஜி, இந்து முன்னணியின் கொள்கை பிரச்சார செயலாளர் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டத்தோடு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கோவை என்.எச் ரோட்டை சேர்ந்த ஆஷிக், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னையைச்சேர்ந்த சலாவூதீன் ஆகியோரை பீளமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பைசல் என்பவரை வெரைட்டிஹால் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள அன்வர் என்பவரை தேடிவருகின்றனர்.