கோவை : நுரையீரல் தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள தனது தாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கோவை: நுரையீரல் தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள தனது தாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (90) உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு சென்ற அவர், தாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.