கடன் சுமையால் பெற்றோரை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை : கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை: ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் சுமையால், தாய் மற்றும் தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கோவை:  ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் சுமையால், தாய் மற்றும் தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஆவாரம் பூ அடுக்குமாடி குடியிருப்பில் தாய் லட்சுமி (47) மற்றும் தந்தை பாலமுருகன் (50) ஆகியோருடன் இவர்களது மகன் வைரமுத்துவும் (28) வசித்து வந்துள்ளார். வைரமுத்து சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், கடன்சுமையால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடன்சுமையை தாங்க முடியாத வைரமுத்து, தனது தந்தை மற்றும் தாய் இருவரையும் கத்தியால் கை மற்றும் கழுத்து பகுதியில் அறுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இதனிடையே, வைரமுத்து திருப்பூரிலுள்ள அவருடைய சித்தி மகாலட்சுமிக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது :- கடன்சுமையால் இந்த உலகை விட்டு செல்கிறேன். நான் இல்லாத இந்த உலகில் எனது தாய். தந்தையும் இருக்க விரும்பவில்லை என அந்தக் கடிதத்தில் கூறியதுடன், சொத்து விவரம் மற்றும் வீட்டின் சாவியை கூரியர் மூலம் அனுப்பியுள்ளார். 



இந்த நிலையில், இன்று மாலை கடிதத்தை படித்த சித்தி மகாலட்சுமி அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே சம்பவ இடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பாலமுருகன் மற்றும் லட்சுமி தம்பதிகளின் கை, கழுத்து பகுதியில் அறுக்கப்பட்டும், வைரமுத்து தூக்கிட்டு் தற்கொலை செய்து கொண்ட நிலையில் 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பீளமேடு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, வைரமுத்து எழுதிய கடிதத்தை மகாலட்சுமியிடமிருந்து வாங்கி பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, வைரமுத்து தன் மரணம் குறித்து ஒரு வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணமடைந்த சம்பவம் கோவையில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...