கோவை : மிகவும் பழமை வாய்ந்த கோவை மேலாண்மை கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோவை மேலாண்மை கூட்டமைப்பு, அனைத்து இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மேலாண்மை கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, குவட்ராசிஸ்டம்ஸ்.நெட் இந்திய பிரைவேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான பிரசாந்த் சுப்ரமணியன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல, மகேந்திரா பம்ப்ஸின் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ராமதாஸ், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ஆர். வரதராஜன் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகார்ஷ் அட்வர்டைசிங் கன்சல்டன்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி என். கிருஷ்ணகுமார், ஜி.ஆர்.ஜி., மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பி. சதாசிவம் ஆகியோர் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம். ராம்ஜி சி.ஏ., பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.