திருப்பூர் : பத்திரப்பதிவு கிரயம், சொத்து வாங்குதல் போன்றவற்றிற்காக வருபவர்களை அலைக்கழிக்கும் அலுவலர்களை கண்டித்து உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்: பத்திரப்பதிவு கிரயம், சொத்து வாங்குதல் போன்றவற்றிற்காக வருபவர்களை அலைக்கழிக்கும் அலுவலர்களை கண்டித்து உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூா் மாவட்டம் உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு கிரயம், சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை போன்றவற்றிற்கு நாள்தோறும் வார நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் பத்திரப்பதிவு முறையால் நேரம் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுவதாக ஏராளமானோர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருபவர்களை அலைக்கழிப்பதாகவும், மரியாதை குறைவாக அதிகாரிகளால் நடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், அந்த அதிகாரிகளைக் கண்டித்து கண்ணமநாயக்கனூா் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தமிழக அரசு இதுபோன்ற ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.