தமிழகம் முழுவதும் 5.7 லட்சம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம் : கோவையில் மட்டும் 1,425 பேரின் பெயர்கள் விடுவிப்பு

தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,77,186 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் மட்டும் 1,425 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,77,186 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் மட்டும் 1,425 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை வெளியிட்டனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இருமுறை பதிவானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரையில் 5,77,186 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கோவையில் 1,425 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதில், இறப்பினால் 83 பேரின் பெயர்களும், இடமாற்றத்தினால் 447 பேரும், இருமுறை பதிவால் 895 பேரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் இருந்து 1,05,042 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் 72,472 பேரும், திருவள்ளூரில் 53,815 பேரும், வேலூரில் 38,071 பேரின் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...