திருப்பூர் : குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு கோடிஸ்வரா நகர், குருவாயூரப்பன் நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதாகவும், இதனால், அத்தியாவசிய தேவைக்கே குடிநீரை காசு கொடுத்து வாங்கிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.