கோவை: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாட முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ல் திறக்கப்பட்டது. அப்போது இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால், கோவை-பொள்ளாச்சி சாலையில் இருந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாடி வந்தனர்.
அந்த பகுதியில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாணவர்கள் சாலையை கடந்து சென்று அந்த மைதானத்தில் விளையாடி வந்தனர். ஆனால், தற்போது மேம்பால தடுப்பு இருக்கும் காரணத்தால் அவர்களால் அந்த மைதானத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள காரணத்தால் சாலையை கடந்து மாணவர்கள் மைதானத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பேருந்து நிலையம் வரை சென்று சாலையை கடந்து மைதானத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.
மேலும், விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் போது வெளிநபர்களின் பழக்கங்களை பார்க்கும் சில மாணவர்கள் அதனையே பள்ளி வளாகத்திற்குள்ளே செய்கின்றனர். இது அவர்களை மட்டுமல்லாது மற்ற மாணவர்களையும் பாதிக்கிறது.
இந்த சூழலில், மாணவர்கள் மைதானத்திற்கு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 1400 மாணவர்களோடு செயல்படும் ஒரே அரசுப்பள்ளி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.