கோவை: கல்லூரி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கல்லூரிக்காக நின்றுகொண்டிருந்த நந்திதா என்ற மாணவிடம், அவரது உறவினர் விஜயகுமார் (27) தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த போது, விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்து வருகிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதுபோன்ற தண்டனைகள், பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.