பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை : பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பிரிக்கால் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 144 பேருக்கு நிர்வாகம் பகுதி கதவடைப்பு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு தொழிலாளர்கள் பலருக்கு பணப்பிடிப்பு மற்றும் இதர தண்டனைகளை வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் மூலம் கடந்த 21-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நல ஆணையம் இதுவரை இப்பிரச்சனையில் தலையிட வில்லை.

இந்த நிலையில், பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பிரிக்கால் நிர்வாகம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பெறும் தொழிற்சங்கத்தை தேர்வு செய்து பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். நிபந்தனையற்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே ஏற்படுத்திட வேண்டும். ஊழியர்களின் பகுதி கதவடைப்பு மற்றும் பணப்பிடிப்பு, இதர தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டியூ., எல்.பி.எப்,ஐ., என்.டி.சி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...