தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் ஊதிய விவகாரம்: தமிழக அரசு நேரடியாக தலையிடக் கோரி மனு

கோவை: தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பிரச்சனையில், தமிழக அரசு நேரடியாக தலையிடக் கோரி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பிரச்சனையில், தமிழக அரசு நேரடியாக தலையிடக் கோரி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான 7 பஞ்சாலைகளில் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மே 31-ம் தேதி பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் போடாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. 

இதனைக் கண்டித்து கடந்த 20-ம் தேதி முதல் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். மண்டல தொழிலாளர் ஆணையரின் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும், நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. நிர்வாகத்தின் அலட்சியத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், தொழிலாளர்களுக்கு ரூ. 15 லட்சம் ஊதிய இழப்பும் ஏற்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழக அரசு நேரடியாக தலையிட்டு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக  மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...