கோவை: கோவை வடகோவை அருகே உள்ள நாராயணசாமி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூட வலியுறுத்தி காமராஜபுரம் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிக்கானி மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள நாராயணசாமி சாலையில் புதிதாக மதுபானக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதனை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- கடந்த 10 ஆண்டுகளில் தங்களது பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக உயிர் இழந்துள்ளனர். இளைஞர் நலனையும், பெண்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை அகற்ற வேண்டும். இது குறித்து சட்டமன்ற உறுப்பினர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆர்.எஸ்.,புரம் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் நகல்கள் அனுப்பி உள்ளோம், என்றனர்.