வால்பாறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் பிஷப்

கோவை: வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கோவை: வால்பாறை பகுதியில் கடந்த மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், ஆறுகளின் நீர் மட்டம் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்ததால், ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கழுத்து அளவிற்கு நின்றது. எனவே, வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

இதனால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உடைமைகளை இழந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நிலச்சரிவு மற்றும் சாலை உடைப்பு ஏற்பட்டும் பலர் பாதிப்படைந்தனர்.

பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருச்சியில் இருந்து சி.எஸ்.ஐ., திருச்சி மற்றும் தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வால்பாறை சி.எஸ்.ஐ., ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.



இதில், கம்பளி, 25 கிலோ அரிசி, உள்ளாடைகள், மேலாடைகள், உள்ளிட்ட நிவாரண பொருட்கள் 130 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. விடுபட்ட குடும்பங்களுக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...