மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வாங்கவும் ஜி.எஸ்.டி - திருப்பூரில் டி.கே.ரங்கராஜன் எம்.பி குற்றச்சாட்டு

திருப்பூர்: இரக்கமில்லா வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்குக் கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதாக, திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.

திருப்பூர்: இரக்கமில்லா வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்குக் கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதாக, திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.



தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துவங்கியது. மாநாட்டின் துவக்கமாக திருப்பூர் யுனிவர்சல் சாலையிலிருந்து துவங்கிய மாற்றுத்திறனாளிகளின் பேரணி, குமரன் சாலை வழியாக டவுன்ஹாலில் நிறைவடைந்தது.



இதில் மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதை எளிதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியவாறே, 1000-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்றனர்.



பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், "நம் நாட்டில் அரசு பினாமியாக இருந்து வருகிறது. நம்முடைய உச்ச நம்பிக்கையான உச்ச நீதிமன்றமோ நடிகை கண் அடித்ததை 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தும் அளவில் உள்ளது. 

இதனால், மக்கள் உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையாக மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரியினை மத்திய அரசு விதித்துள்ளது." என்றார். 

இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...