ஒற்றுமையுடன் பணியாற்றி கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் : வால்பாறையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கோவை மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.



முன்னதாக வால்பாறை கூட்டத்திற்கு வருகை தந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு, செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வால்பாறை பகுதியில் கட்சிக்கு அதிக வாக்குகள் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக தங்களுக்கிடையே உள்ள போட்டி பிரிவுகளை தவிர்த்து ஒற்றுமையுடன் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து இப்போதே தேர்தல் பணியை துவக்க வேண்டும். என்றார்.

 மேலும் பேசிய அமைச்சர், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களை பிடித்து மத்தியில் நமது உறுப்பினர்கள் அமைச்சர்களாக ஆவார்கள் என்று தெரிவித்தார்.



இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...