கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியை அடுத்த காமராஜர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையை மூட வலியுறுத்தி இன்று அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே சமரசம் பேசினர். தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.