கேரளாவில் மழை பாதிப்பு காரணமாக கொள்முதல் நிறுத்தப்பட்டதால் விலை வீழ்ச்சி : வெங்காயம் உற்பத்தியாளர்கள் கவலை

திருப்பூா்: தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளின் பெரும்பங்கு நுகர்வு மாநிலமாக கேரளம் விளங்கி வருகிறது. அம்மாநில மொத்த விற்பனையாளர்கள் நேரடியாகவே தமிழகத்தின் பிரதான சந்தைகளில் காய்கறி உள்ளிட்ட இதர வேளாண் உணவுப் பொருள்களை கொள்முதல் செய்து அம்மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

திருப்பூா்: தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளின் பெரும்பங்கு நுகர்வு மாநிலமாக கேரளம் விளங்கி வருகிறது. அம்மாநில மொத்த விற்பனையாளர்கள் நேரடியாகவே தமிழகத்தின் பிரதான சந்தைகளில் காய்கறி உள்ளிட்ட இதர வேளாண் உணவுப் பொருள்களை கொள்முதல் செய்து அம்மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

தற்போது கேரளா மாநிலம் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக வேளாண் உற்பத்தி பொருள்கள் தேக்கமடைந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம், உடுமலை கோட்ட அளவில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண் சாகுபடி நடைபெறுகிறது. அதில் காய்கறி, பழ வகைகள், கீரைகள், வெங்காயம், மிளகாய், வெண்டை, கத்தரி ஆகியவை கணிசமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்ளூர் தேவை போக எஞ்சியவை அதிக அளவில் கேரளாவுக்கு கொள்முதல் செய்யப்படும்.

ஆனால், கடந்த சில நாட்களாக கேரள வியாபாரிகள் வராததால் கொள்முதலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து உடுமலை பகுதி விவசாயிகள் கூறும்போது, "நாட்டு வெங்காயம் அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது.



ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்யப்பட்டது. மழையால் சில பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெளிமாநில வரத்து அதிகரிப்பு, கேரளாவில் கொள்முதல் நிறுத்தம் என அடுத்தடுத்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத காரணத்தால், கிடைக்கும் விலைக்குக் கொடுக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதனால் எதிர்பார்த்த லாபம் இன்றி பொருளாதார இழப்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர்." என்றனர்.



உடுமலை சுற்று வட்டாரத்தில் சுமார் 4,000 முதல் 5,000 ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெறுகிறது. ஒரு ஏக்கருக்கு 7 டன் வரை விளைச்சல் கிடைக்கும். சந்தையில் எதிர்பாராத திருப்பங்களால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கும் நிலை உள்ளது. வேளாண் பொருள்களுக்கு நிலையான விலை கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே இழப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க முடியும். 

தமிழக அரசு விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நிரந்தர விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...