கோவையில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி : மருத்துவ பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

கோவை: கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்க கோவை கிளையுடன் இணைந்து இன்று கோவையில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்க கோவை கிளையுடன் இணைந்து இன்று கோவையில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

கண் தானம் இரு வார விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு வார விழா மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களிடையே கண் தானத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்த கண் தானம் விழிப்புணர்வு பேரணியை கோயமுத்தூர் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் கோயம்புத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மருத்துவர்கள், ஹிமன்அனிமல் ஸ்சொஸைட்டி, கோயம்பத்தூர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் கண் வங்கி பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் இந்த பேரணியில் ஹிமன்அனிமல் ஸ்சொஸைட்டி சார்பில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. இதில் கண் பார்வையற்ற ஒரு நாயும், கால்களை இழந்த ஒரு நாய் குட்டியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...