இந்து மக்கள் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளை கொலை செய்ய திட்டம் : கோவையில் 5 பேர் கைது

கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேரை கோவை நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேரை கோவை நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் முக்கியமான இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாகவும், அந்த நபர்கள் சென்னையில் இருந்து கொச்சின் செல்லும் ரயிலில் பயணிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது 

அந்த நபர்களை கோவை இரயில் நிலையத்தில் இறங்கும் போது சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கோவை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்த ஐந்து பேரும் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது மகன் ஓம்கார் பாலாஜி, இந்து முன்னணியின் கொள்கை பிரச்சார செயலாளர் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டத்தோடு வந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

 இதனையடுத்து கோவை என்.எச் ரோட்டை சேர்ந்த ஆஷிக், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), திண்டிவனத்தைச்சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னையைச்சேர்ந்த சலாவூதீன் ஆகியோரை பீளமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்து அமைப்பின் தலைவர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை மாநில அரசு இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...