பொது சிவில் சட்ட விவகாரம் : இந்திய சட்ட ஆணையத்திற்கு இந்திய முஸ்லீம் கட்சி பாராட்டு

கோவை: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த சட்ட ஆணையத்திற்கு இந்திய முஸ்லீம் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

கோவை: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த சட்ட ஆணையத்திற்கு இந்திய முஸ்லீம் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. 

நாட்டில், பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக, தனிநபர் சட்டங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சட்ட ஆணையத்தை 2016ல் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன், சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பான விவாத அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொது சிவில் சட்டம் என்பது மிகவும் விரிவானது. இதுவரை நம் நாட்டில் சோதித்து பார்க்கப்படாத விமர்சனங்களை உருவாக்கக் கூடியது. எனவே, பொது சிவில் சட்டம் தற்போது தேவையில்லை என இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 

சட்ட ஆணையத்தின் இந்த முடிவுக்கு இந்திய முஸ்லீம் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.எம். காதர் மொய்தீன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், சட்ட ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது எனக் கூறிய அவர், ஆர்டிகல் 44-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...