தமிழக, கேரள மக்களிடையே அதிகரிக்கும் சமூக வலைதள வார்த்தைப் போர் : பிரபலங்கள் மற்றும் போலீசார் வேண்டுகோள்

தமிழகம், கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக வலைதள வார்த்தைப் போரை கைவிடும்படி பொதுமக்களுக்கு கேரள பிரபலங்கள் மற்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகம், கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக வலைதள வார்த்தைப் போரை கைவிடும்படி பொதுமக்களுக்கு கேரள பிரபலங்கள் மற்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோக்களின் மூலம் தமிழகம், கேரள மக்களிடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சகோதரத்துவத்தை கெடுக்கும் வகையிலான வீடியோக்களை பதிவிட வேண்டாம் என கேரள மக்களுக்கு அம்மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

வெள்ளத்தில் மிதந்த கேரளாவுக்கு வண்டி, வண்டியாக ஓயாமல் தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், தமிழகர்களின் சகோதர உணர்வை பாராட்டி மலையாள தேசத்தை சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டனர். பதிலுக்கு, தமிழர்களும் பதில் வீடியோக்களை போட்டனர். அதுமட்டுமில்லாமல், #KeralaLovesTamilNadu,#வந்தாரை_வாழ_வைக்கும்_தமிழ்_நாடு, #TogetherWeShallOvercome, #WeLoveTamilNadu போன்ற ஹேஸ்டேக்குகளும் சமூகவலைதளங்களை பறக்க விட்டன. 

இந்த நிலையில், இந்த சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் வகையில், கேரளாவை சேர்ந்த சிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விரோதிகள் எனக் கூறியும், வசைபாடியும் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பதிலுக்கு வீடியோக்கள் மூலமாகவும், கமெண்டுகள் மூலமாகவும் சண்டையிட்டனர். தொடர்ந்து, பலர் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால், சகோதரத்துவம் மறக்கடிக்கப்பட்டது.

எனவே, சமூக வலைதளங்களில் ஒருசிலரின் தனிப்பட்ட பிரச்சனைகளால், இரு மாநிலங்களிடையே பகைமையை உருவாக்க வேண்டாம் என கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வி.டி., பல்ராம், நடிகர் ரீமா கல்லிங்கால், பத்திரிக்கையாளர் சஹாயினா நஃபீஸா உள்ளிட்டோர் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல, போலீசாரும், அடையாளம் தெரியாத நபர்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...