மழையைத் தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் : 23 பேர் பலி

மழை மற்றும் வெள்ளம் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரள மக்கள் தற்போது எலிக்காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழை மற்றும் வெள்ளம் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரள மக்கள் தற்போது எலிக்காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, அம்மாநில மக்களை படும் இன்னல்களுக்கு ஆளாக்கியது. இந்த துயரத்தில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் மீண்டு வருகின்றனர். அதே நேரத்தில், மழைக் காரணமாக நோய்த் தொற்றுகளும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கு இறப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள சுகாதாரத்துறை, சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், கடந்த 5 நாட்களில் எலிக்காய்ச்சலுக்கு 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலியின் சிறுநீர் மூலம் (லெப்டோஸ்பை ரோசிஸ்) மனிதர்களுக்கு எலி காய்ச்சல் பரவுகிறது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் ஆகிய இடங்களிலும் இந்த பாதிப்பு இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



மேலும், காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட தொற்று நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் தாங்களாகவே சுய சிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்கும்படியும், அருகில் உள்ள சுகாதார மையத்தை ஆலோசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...