கோவை: தமிழகத்தில் உள்ள 500 அரசுப் பள்ளிகளில் 'அடல் டிங்கர் லேப்' என்ற பெயரில் அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ராமநாதபுரம் அல்வேர்னியா பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி., வேலுமணி மற்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜீன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- ரேங்க் அடிப்படை ஒழிக்கப்பட்டதால் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முடியவில்லை என்ற வருத்தம் தனியார் பள்ளிகளுக்கு இருக்கும். ஆனால், கோடிக்கணக்கான மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு சிறப்பான பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த கல்விமுறை வெற்றி பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது, என்றார்.
இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள 500 அரசுப்பள்ளிகளில் 3 மாதங்களில் 'அடல் டிங்கர் லேப்' என்ற பெயரில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடப்படும். தமது தலைமையில் அடுத்த வாரம் ஆசிரியர்களுக்கான ஸ்கில் டெவலெப்மெண்ட் கூட்டம் நடைபெற இருக்கிறது," என்றார்.