முதலமைச்சர் நினைப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் ஸ்டாலின் : கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விமர்சனம்

கோவை: தி.மு.க., தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், முதலமைச்சராகி விட்டதாக நினைத்துக் கொண்டு ஆதரமாற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவை: தி.மு.க., தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், முதலமைச்சராகி விட்டதாக நினைத்துக் கொண்டு ஆதரமாற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது :- பாரம்பரியமிக்க ஒரு கட்சியான தி.மு.க.,வில் வாரிசு அடிப்படையில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். உலகின் பணக்கார குடும்பங்களில் 10-வது குடும்பம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதலில் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 

முந்தைய தி.மு.க., ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ. 7,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., அரசு 5 ஆண்டுகளில் ரூ. 21,988 கோடியை ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 4,900 கோடி மில்லியன் லிட்டராக இருந்த குடிநீர் வினியோகத்தில் 2,400 மில்லியன் லிட்டர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. 8 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு டெண்டர் வழங்காமல் பாதியிலேயே தி.மு.க., அரசு விட்டுச்சென்றது. அந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அ.தி.மு.க., ஆட்சியில் முழு வேகத்தில் நடந்து வருகிறது. 

இதேபோல, சாலை, பாலங்கள், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட 7 துறைகளில் அ.தி.மு.க., அரசு முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. டெண்டர்களும் இணைய வழி டெண்டர்களாகவே வழங்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி., விளக்குகள் தொடர்பான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 7 ஆண்டு பராமரிப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை அரசுக்கு மின்கட்டணம் மிச்சமாகியுள்ளது. 

ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆட்சியில் இருக்கும் போது ஈழப் படுகொலைகளை தடுத்திருக்கலாம். அப்போது, மவுனமாக இருந்து விட்டு, தற்போது பேசுவது ஏன்..?. ஸ்டாலின் ஒரு கட்சிக்கு தான் தலைவராகி இருக்கிறார். அவர் முதலமைச்சர் ஆகவில்லை. அவர் முதலமைச்சராகி விட்டதாக நினைத்துக் கொண்டு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார், எனக் கூறினார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...