தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது பி.எஸ்.ஜி.,

கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானம், தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது.

கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானம், தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கோவை மாவட்ட அளவில் நடத்தப்படும் பெரும்பாலான போட்டிகள் பி.எஸ்-ஜி., மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த மைதானம், பராமரிப்பு, தோற்றம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி வருகிறது. இதனால், கடந்த 6 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதை பி.எஸ்-ஜி., கல்வி நிறுவனமே பெற்றுள்ளது.

இந்த நிலையில், 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதும் பி.எஸ்.ஜி., நிர்வாகத்திற்கே கிடைத்துள்ளது. இந்த விருதை பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் டி. பழனிசாமிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் கே.எஸ்., விஸ்வநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், கோவை மாவட்ட கிரிக்கெட் வாரியத் தலைவர் டி. லட்சுமிநாராயணசாமி, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் உதவி செயலாளர் எஸ். மார்ட்டின் ராஜ் ஆகியோர் இருந்தனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...