மேட்டுப்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: கிராம மக்கள் முற்றுகை

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி கிராம ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி கிராம ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் மத்திய கூட்டுறவு வங்கியின் விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் தீடீர் ஆய்வு மேற்க்கொண்டனர்.

இதில் பெள்ளாதி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கான கடன் வழங்கியதாக காட்டப்பட்டுள்ள கணக்கு, கிராம மக்களிடம் பெற்ற டெபாசிட் தொகை விபரம், தங்க நகைகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ள தொகை மற்றும் நகைகளின் இருப்பு போன்ற பலவற்றிலும் மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது.

இதற்கு போலி ரசீதுகள் பயன்படுத்தபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முறைகேடுகள் தொடர்பாக இக்கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மனோகரனை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.



பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின் போதும் இந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

 இந்நிலையில், மத்திய வங்கி அதிகாரிகளின் ஆய்வையடுத்து பல நாட்கள் இக்கூட்டுறவு சங்கம் மூடி கிடந்ததோடு, இன்று வரை ஒரு மாத காலமாக இதன் செயலாளர் மனோகரன் வராமல் தலைமறைவாக இருப்பது பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவசர தேவைக்காக தாங்கள் போட்டு வைத்திருந்த வைப்பு தொகையினை திருப்பி கேட்டாலோ, அடமானமாக தாங்கள் வைத்திருந்த தங்க நகைகளை பணம் செலுத்தி திரும்ப கேட்டாலோ, உயர் அதிகாரிகளின் ஆய்வு முழுமை பெற்ற பின்னரே உரிய முறையில் கணக்கிட்டு தர இயலும், அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது என தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் கூறுவதால் செய்வதறியாது கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் இப்பகுதி மக்கள்.



தங்களது வைப்பு தொகை மற்றும் நகைகளின் நிலை என்ன? என்பது குறித்து சரியான விளக்கம் அளிக்கக்கோரி வேளாண்மை கடன் சங்கத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சனை குறித்து கூட்டுறுவு சங்க உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

சுமார் இரண்டு கோடிக்கும் மேல் கையாடல் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவிக்கும் பெள்ளதி கிராம மக்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதோடு, தங்களின் பணம் மற்றும் நகை திரும்ப கிடைக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...