டெல்லியில் இருந்து கோவைக்கு நான்-ஸ்டாப் விமானங்களை இயக்குகிறது ஸ்பைஸ் ஜெட்

கோவை: வரும் அக்டோபர் மாதம் முதல் டெல்லி-கோவைக்கு நான்-ஸ்டாப் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை: வரும் அக்டோபர் மாதம் முதல் டெல்லி-கோவைக்கு நான்-ஸ்டாப் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக இந்த சேவையை ஜெட் ஏர்வேஸ் அறிவித்திருந்த நிலையில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இந்த சேவை இயங்கும் என்று ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் விமானம், 11 மணிக்கு கோவை வந்தடையும்.

மீண்டும், 11.30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு டெல்லி சென்றடையும்.

மேலும், பெங்களூருக்கு இரண்டு நான்-ஸ்டாப் விமானங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அது, கோவையில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.10 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

மற்றொரு விமானம் மாலை 5.45-க்கு புறப்பட்டு 6.40-க்கு சென்றடையும்.

இந்த புதிய சேவைகளால் வணிகர்கள் மற்றும் பயணிகளின் நேரங்கள் சேமிக்கப்படும் என்றும், இது சுலபமாக பயணிக்கப் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...