சேலம் அருகே தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 7 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சேலம்: சேலம் அருகே தனியார் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.

சேலம்: சேலம் அருகே தனியார் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.



சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 12.40 மணிக்கு தனியார் பேருந்து தர்மபுரி நோக்கி கிளம்பியது. பேருந்து மாமாங்கம் அருகே ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது பேருந்து மோதியது. இதில், தனியார் பேருந்து தடுப்பை தாண்டி அடுத்த சாலைக்கு சென்றது. 

அப்போது, பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆம்னி பேருந்து தலைகளாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், இரண்டு பேருந்துகளிலும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 5 ஆண்கள், 2 பெண்கள் என ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.



படுகாயம் அடைந்த அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்தினால் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 



இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, சேலம் மாநகர் காவல் ஆணையர் சங்கர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். மேலும், கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த பேருந்துகள் இரண்டையும் தூக்கி நிறுத்தி அப்புறப்படுத்தினர். இந்த மீட்புப்பணிகளின் போது ஒரு குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யார் என்பது தெரியாத நிலையில் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுள்ளனர். 



இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் தனியார் பேருந்து ஓட்டுனர் வந்து கவனக்குறைவாக ஓட்டியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...