கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் அமைப்பின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா நடைபெற்றது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் அமைப்பின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா நடைபெற்றது.



கோவை அரசு மருத்துவமனையில் 4 மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அதேபோல, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் முக்கியமான மூன்று சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதனால், இந்த கேன்சர் வார்டிற்கு மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், இந்த கேன்சர் வார்டில் போதுமான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்கள் இல்லாத நிலை இருந்தது. 



இந்த நிலையில், ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் ஜெயின் அமைப்பினர் கேன்சர் வார்டுக்கு தேவையான 40-க்கும் மேற்பட்ட விசிறிகள், 50-க்கும் மேற்பட்ட கட்டில் போன்ற உபகரணங்களை வழங்கியுள்ளனர். அதோடு, அந்த வார்டை வண்ணம் பூசி புதுப்பொலிவு படுத்தியுள்ளனர். 

இன்றைய நிகழ்ச்சியில், கேன்சர் வார்டை ஜெயின் பக்தி மண்டல் அமைப்பினர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தலைமையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கேன்சர் வார்டின் முதன்மை மருத்துவர் சுரேஷ் வெங்கடாசலம், மருத்துவர் ராகவேந்திரா ஜெயின் அமைப்பின் மத குருக்கள் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...