கோவை : பெண் அளித்த பாலியல் புகாரால் கோவையைச் சேர்ந்த வன அதிகாரி வேலூர் மாவட்டத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுலை 23-ம் தேதி மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணன் மீது கோவை மாவட்ட வன அலுவலரிடம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தை மேலிடத்திற்கு எடுத்துச் செல்லாமல், மாவட்ட வன அலுவலர் வட்டத்திற்குள்ளேயே முடித்துக் கொள்ளும் வகையிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன. வன அதிகாரி மீதான புகார் குறித்து விசாரிக்க கோவை மாவட்ட வன கண்காணிப்பாளர் ஆர். கலாமணி மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கொண்ட குழுவை நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா, பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக தனக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல், குழு அமைத்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற, வன அதிகாரி எஸ். கண்ணனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா, கடந்த 23-ம் தேதி மேலதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதற்கு கிடைத்த இன்றைய பதில் கடிதத்தில், மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணனை வேலூர் மாவட்டத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அதிகாரியால் நியமிக்கப்பட்ட குழுவில் இருப்பவர்கள், குற்றம் சுமத்தப்பட்டுள்ள வன அதிகாரி எஸ். கண்ணனின் பதவிக்கு இணையானவர்களே என்பதால், இந்த விசாரணையில் குறுக்கீடு நடைபெற வாய்ப்பிருப்பதாக தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா சந்தேகித்துள்ளார். இதற்காக, கடந்த 27-ம் தேதி உதவி வன பாதுகாவலர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என 4 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுவை தீபக் வத்வஸவா நியமித்துள்ளார். இந்தக் குழு தனது விசாரணையை விரைந்து முடிக்கும் என தலைமை வன பாதுகாப்பு அதிகாரி தீபக் வத்வஸவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.