கோவை: பேரூராதீனத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
கோவை: பேரூராதீனத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
மறைந்த பேரூர் ஆதின மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் உடலுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பேரூராதீனம் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தமிழ் மற்றும் தமிழகத்தின் மீது பற்று கொண்டு வாழ்ந்த அடிகளார் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், தமிழர்கள் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கூறி களமாடியவராவார். தமிழக அரசின் மகராஜன் குழுவில் இடம்பெற்று ஆய்வு செய்து, அக்குழு அரசுக்குப் பரிந்துரைத்த கருத்துக்களில் அடிகளாரும் பங்கு பெற்றார். அவர் தமிழருக்காக உழைத்த உழைப்பே, அவர் மீது நாங்களும் நட்பு கொள்ள காரணமாகியுள்ளது. தமிழ் மீது பற்று கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு துணை நின்றவர் குரு மகா சன்னிதானம், என்றார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "அடிகளார் மறைவு கோவை மாவட்டத்திற்குப் பேரிழப்பாகும். பேரூர் தமிழ் கல்லூரி தமிழ் வளர்ப்பதில் முதன்மையான கல்லூரியாக உள்ளது. அடிகளார் ஆன்மிக பணிகளை சிறப்பாக செய்துள்ளார். பேரூராதினத்திற்கும், தமிழ் கல்லூரிக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்," என்றார்.
