உடல்நலக்குறைவால் பேரூர் ஆதினம் முக்தியடைந்தார் : இறுதிச்சடங்குகள் முடிந்து இன்று மாலை நல்லடக்கம்

கோவை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் ஆதினம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 97.


கோவை : உடல் நலக்குறைவால் இன்று காலமான பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் உடல் இறுதிச்சடங்குகள் முடிந்து இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 

அடிகளார் 

சாந்தலிங்க இராமசாமி அடிகளார் என்பவர் கோயம்புத்தூர் மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் கீழை சிதம்பரம் என்று அழைக்கப்படும் 400 வருடப் பழமையான திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழிப் பேரூராதீனத்தின் குரு முதல்வராக இருந்தார்.



உதகை ஆலமர் செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் திகழ்ந்தார். கொங்கு நாட்டின் சமய சமுதாய வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இவர் பெருந் தொண்டாற்றி வந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக (1972 - 1978) இவர் பணியாற்றினார். அப்போது தமிழ் மொழி வாயிலாகவே அனைத்து அலுவல்களும் நிகழவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டு, தமிழ்க் கல்லூரிகளில் இளங்கலை இலக்கியப் பாடத்தைக் கொண்டுவந்து தமிழ்க் கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகளுக்கு இணையான நிலைக்கு உயர்த்தினார். 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பேரூர் ஆதீனத்தில் வைக்கப்பட்டுள்ள இவரது உடல், ஆதீனம் முறைப்படி இன்று மாலை இறுதி சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...