தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் மீது தேசத்துரோக சட்டம் பதியப்பட்டு, மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது, அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சட்ட ஆணையம் கூறியிருப்பதாவது :- அரசுக்கு எதிராக முரண்படுதலை தேசத்துரோகமாக கருத முடியாது. எதிர்கருத்துகள் மூலமே மக்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்த முடியும். தேசத்துரோகம் என்பதை முறையாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேச்சுரிமை கொடுத்துவிட்டு, பேசினால் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தல் முரணானது, இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்கவும் இந்திய சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.