இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக மிக கடுமையாக சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக மிக கடுமையாக சரிந்துள்ளது. 

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் 70.74 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய (ஆக.,31) வர்த்தக நேர துவக்கத்தின் போது 70.95 ஆக இருந்தது.

வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரூபாய் மதிப்பு 26 காசுகள் வரை சரிந்து 71 என்ற நிலையை எட்டியது. இது முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளதும், இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆசிய சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 78 அமெரிக்க டாலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...