நாள்தோறும் ஸ்தம்பிக்க வைக்கும் புலியகுளம் சாலை : போக்குவரத்து நெரிலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை : அவிநாசி சாலைக்கும் திருச்சி சாலைக்கும் இடையில் உள்ள புலியகுளம் பகுதியில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: அவிநாசி சாலைக்கும் திருச்சி சாலைக்கும் இடையில் உள்ள புலியகுளம் பகுதியில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை புலியகுளம் பகுதியானது அவிநாசி சாலையையும், திருச்சி சாலையையும் இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்த சாலையை கடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 



ஆகவே, பொதுமக்கள் இந்த நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் ஒன்றிணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து இந்த பகுதி வாசியான தம்பு கூறியதாவது:- புலியகுளம் பகுதியில் தொடர்ந்து சில மாதங்களாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அடிக்கடி சிறிய சிறிய விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் நேரங்களில் போலீசார் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதுடன் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கலாம், என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...