சமூக செயற்பாட்டாளர்கள் கைதுக்கு எதிராக கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: இடதுசாரி, தலித் செயற்பாட்டாளர்களை கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: இடதுசாரி, தலித் செயற்பாட்டாளர்களை கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி, தலித் எழுத்தாளர்கள் ஐந்து பேர் ஒரிசா, ஆந்திரா, மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.



இந்த சூழலில், அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக கூறி அதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்தும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...