பெரும் முதலாளிகளைக் காக்க மக்களின் பணத்தை செலவழிக்கிறார் பிரதமர்: கோவையில் காங்கிரஸ் எம்.பி பேச்சு

கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ராகுல் கவுடா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ராகுல் கவுடா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:- 

காங்கிரஸ் ஆட்சியின் போது, உலகில் தலை சிறந்த விமானப் படையாக உருவாக என்ன தேவை? என்று இந்திய விமானப் படையிடம் கேட்கப்பட்டது. அப்போது விமானப் படைக்கு 128 மல்டி லெவல் விமானங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதில் ரபேல் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பேச்சு வார்த்த நடத்தி வரப்பட்டது. 18 விமானங்களை நேரடியா டெசோ நிறுவனம் மூலம் வாங்குவது எனவும், மீதமுள்ள 108 விமானங்கள் பெங்களூருவில் 70 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஹிந்துஸ்தான் எரோனாட்டிகலால் தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.



உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் போது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக இருந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2015-ல் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்வதற்கு 12 நாட்களுக்கு முன்பு அனில் அம்பானி பாதுகாப்பு சம்பந்தமான புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

பாரிஸ் சென்ற மோடி 36 விமானங்களை வாங்குவதாக அறிவித்தார். இந்திய விமானப் படை 128 விமானங்கள் தேவையென கேட்டிருந்த நிலையில் 36 விமானங்களை மட்டும் வாங்க பிரதமர் முடிவு செய்தது எவ்வகையில் உலகில் தலை சிறந்த விமான மாறும்? இதனை வாங்குவதில் நாடாளுமன்ற கூட்டு குழுவின் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டது.

விமானங்கள் வாங்குவதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இது குறித்த கேள்விகள் எழுந்த போது உடனடி தேவைகள் இருந்ததால் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை விமானங்கள் வழங்கப்படவில்லை.



மேலும், இது குறித்து கேள்வி எழுப்பியபோது பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டது. 526 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்கள் மூன்று மடங்கு உயர்த்தி வாங்கப்பட்டது. சீனாவிடம் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் அனில் அம்பானியை காப்பாற்ற மக்கள் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மோடி அரசிடம் இருந்து பதில் இல்லை.

அனுபவமே இல்லாத அம்பானி நிறுவனத்திற்கு எதற்கு வாய்ப்பு அளித்தனர்? பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு மோடி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...