கோவை: கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், அறம் அறக்கட்டளை சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், மருந்துகள், உணவுப் பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் 21 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் சேமிக்கப்பட்டது. இதில் 7 டன் அளவில் விலங்குகளுக்கு என வைக்கோலும் அடங்கும்.

இந்த சூழலில், 21 டன் எடை கொண்ட இந்த பெரிய அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்ப சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த நிவாரணப் பொருட்கள் கோவையில் இருந்து புறப்பட்டு கடந்த ஞாயிறன்று கேரளா மாநிலம் ஆழப்புழா சென்றடைந்தது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டத்தின் வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு கூறுகையில், "நிவாரணப் பொருட்களை அனுப்ப ரயில்வே நிர்வாகம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் இருந்தும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் பொருட்டு எங்களுக்கு கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை சரக்கு ரயில் மூலம் கேரளா அனுப்பி வருகிறோம்.
இந்த சூழலில் தான் பெரிய அளவு எடையுள்ள நிவாரணப் பொருட்களை அனுப்ப எங்களுக்கு கோரிக்கை வந்தது. தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், 21 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பினோம்." என்றார்.

இது குறித்து அறம் அறக்கட்டளையின் நிறுவனர் லதா சுந்தரம் கூறுகையில், "எங்கள் அமைப்பு திரட்டிய நிவாரணப் பொருட்களை கேரளா கொண்டு செல்ல உதவிய ரயில்வே நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பார்சல் அதிகாரிகள், போர்டர்ஸ் மற்றும் ரயில்வே ஊழியர்கள் என அனைவரும் எங்களுக்கு உதவினர்." என்றனர்.