சசிகுமார் கொலை வழக்கு: சாயிபாபா காலனியில் என்.ஐ.ஏ திடீர் சோதனை

கோவை: இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று கோவை சாயிபாபா காலனியில் திடீர் சோதனை நடத்தினர்.


கோவை: இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று கோவை சாயிபாபா காலனியில் திடீர் சோதனை நடத்தினர்.



இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்ற நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

வீடுகளில் சோதனை

இந்நிலையில், தேசிய புலனாய்வு துறை, சசிகுமார் கொலை வழக்கில் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் மூன்று செல் போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மீண்டும் சோதனை

இந்நிலையில் இன்று கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து எஸ்.பி தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று கோவை வந்தனர். இவர்கள் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் உதவியுடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஷாஜகான்(70) மகன் முன்னா (38) அவர்களின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். முன்னாவின் தந்தைக்கு சொந்தமான துடியலூர் பகுதியில் உள்ள மர அறுப்பு ஆலையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக வெளிநாட்டில் உள்ள முன்னா என்பவரை அழைத்திருந்தாகவும், ஆனால், வெளிநாட்டில் உள்ளதால் முன்னா வர மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் கோவையில் கடந்த மூன்று மாதங்களாக இல்லாத நிலையில் இன்று திடீரென பூட்டி இருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முகமை கண்காணிப்பாளர் ராகுல் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் சௌகத் அலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...