கோவை-டெல்லி விமான சேவை : கொங்கு குளோபல் ஃபாரம் வரவேற்பு

கோவை: ஜெட் ஏர்வேஸ் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 28-ம் தேதி முதல் கோவையில் இருந்து-டெல்லிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

கோவை: ஜெட் ஏர்வேஸ் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 28-ம் தேதி முதல் கோவையில் இருந்து-டெல்லிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

9W 994 என்ற எண் கொண்ட விமானம் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 8.40 மணியளவில் டெல்லி சென்றடையும். மேலும், டெல்லியில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.50 மணியளவில் கோவை வந்தடையும்.

சமீபத்தில் கோவையில் இருந்து பெங்களூர் மற்றும் சென்னை செல்லும் ஏழு விமானங்கள் சேவையை ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்தது. இதன் காரணமாக பயணிகள் மாற்று விமானங்களை தேர்வு செய்து அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விமான சேவைகளை தொடர்ந்து இயக்குமாறும் கோவை-டெல்லி-க்கு நேரடி விமான சேவையை தொடங்குமாறும் கொங்கு குளோபல் ஃபாரம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன்படி, தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவரும், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் கூறுகையில், "எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய இந்த விமான சேவை நேரங்களும் பொருத்தமாக உள்ளது. தற்போதைய விமானத்தின் அடிப்படையில் ஒரு வணிகர் அதிகாலையிலேயே டெல்லி சென்றடைய முடியும். அங்கு பணிகளை முடித்துவிட்டு அன்றே கோவை திரும்பவும் முடியும்." என்றார்.

இந்த விமானத்தின் மூலம் பயணிகள் மட்டும் பயன்பெறாமல், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இரவு 11 மணியில் இருந்து காலை 7 மணி வரை இயங்கும் விமானங்களுக்கான பெட்ரோலியம் மீதான வாட் வரி குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது இயங்கும் இந்த விமானம் அந்த மானியத்தைப் பெற தகுதி பெற்றுள்ளது. 

இதே போல், கோவை-ஹைதராபாத் விமான சேவையையும் ஜெட் ஏர்வேஸ் அறிமுகம் செய்கிறது. ஹைதராபாத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.55 மணியளவில் கோவை வரும் அந்த விமானம், இங்கிருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு 3.45 மணியளவில் மீண்டும் ஹைதராபாத்தை சென்றடைகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...