கோவை: வால்பாறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வால்பாறை டோபி காலனி, சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது பொள்ளாச்சி தாலூக்கா செயலாளர் சுப்பிரமணி, வழக்கறிஞர் விஸ்வநாதன், துணை தாலூக்கா செயலாளர் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.