6 பேரை பலிகொண்ட சுந்தராபுரம் கார் விபத்து சம்பவம் : கார் ஓட்டுநரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை : சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை : சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஆக.,1-ம் தேதி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி, கார் ஓட்டுநர் ஜெகதீஸ்குமார் சார்பில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகதீஸ்குமாரின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...